தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

#India #Tamil Nadu #Tamil People #Rain #HeavyRain #2023 #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. திருநெல்வேலி, மதுரை, தேனி, கும்பகோணம், கடலூர், நாகை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4