அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பேராசிரியர் ஒருவர் பலி

#Death #America #world_news #2023 #Breakingnews #Died #Teacher
Mani
2 years ago
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பேராசிரியர் ஒருவர் பலி

சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் அப்பாவி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழக்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்த பாடில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் அறிவியல் கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து பேராசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் பேராசிரியர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த பேராசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி மூலம் மர்ம நபரிடம் விசாரணை நடத்திய போலீசார், கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். கொலை நடந்த 3 மணி நேரத்திற்குள் சந்தேக நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவன் மீது வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4