அதிரடியாக தடை விதித்த இந்தியா: பெரும் சிக்கலில் உலக நாடுகள்

#India #rice #world_news #Export
Mayoorikka
2 years ago
அதிரடியாக தடை விதித்த இந்தியா: பெரும் சிக்கலில் உலக நாடுகள்

உள்ளூரிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் உலக நாடுகள் சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளன.

 இதன்காரணமாக கடந்தமாதம் உள்நாட்டில் விலைவாசி உயர்வைத் தணிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடைவிதித்திருந்தது.

 எனினும் அதன்பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தனது அரிசி ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டு வருகின்றது. 

உலகளவில் மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அரிசியை பிரதான உணவாக நம்பியுள்ள நிலையில் , உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40% பங்களிப்பை வழங்கி வருகின்றது.

 குறிப்பாக இந்தியாவிலிருந்து 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் இந்திய அரசானது அரசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம் முடிவானது அரிசியைப் பிரதான உணவாக உட்கொள்ளும் நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4