காங்கோவில் போராளிக்குழுவினர் தாக்குதல் - 14 பேர் உயிரிழப்பு!

#world_news #Lanka4
Thamilini
2 years ago
காங்கோவில் போராளிக்குழுவினர் தாக்குதல் - 14 பேர் உயிரிழப்பு!

காங்கோவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமமொன்றை தாக்கிய போராளிக்குழுவினர் 14 பேரை கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

CODECO போராளிகளின் ஆயுதமேந்தியக் குழுவினர் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். 

இந்த தாக்குதலில் காங்கோவின் 09 குடிமக்களும், காங்கோ சிப்பாயும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நான்கு தாக்குதல்தாரிகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

காங்கோவில் பல தசாப்பதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது. 120 இற்கும் மேற்பட்ட ஆயுதக் குழுவினர் இந்த பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

2022 வரையிலான நான்கு ஆண்டுகளில் CODECO போராளிக்குழுவினரின்  தாக்குதல்களால் கிட்டத்தட்ட 1,800 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4