ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் உதயநிதி

#India #Death #Accident #Train
Prasu
2 years ago
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் உதயநிதி

உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. 

இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில், மதுரை ரெயில் நிலையத்தில் சுற்றுலா ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.

இந்த கோர தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கும் அதேவேளையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் நலம்பெற விரும்புகிறோம்.

 ரெயில் பயணங்களில் மக்கள் பாதுகாப்பினை உறுதிசெய்ய ஒன்றிய ரெயில்வே அமைச்சகம் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4