20 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு உத்தரவு

#Student #world_news #government #Breakingnews #School Student #SaudiArabia
Mani
2 years ago
20 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு உத்தரவு

பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோரை சிறையில் அடைக்க சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சவுதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ஒரு மாணவர் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2-வது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3-வது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைத்து உறுதி மொழி பெறப்படும். தொடர்ச்சியாக 15 நாட்கள் வரவில்லையென்றால் அந்த மாணவர் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்.

தொடர்ந்து 20 நாட்களுக்கு குழந்தை பள்ளிக்கு வரவில்லை என்றால், பெற்றோரிடம் விசாரணை நடத்தப்படும். பதில் அளிக்கத் தவறினால், பெற்றோர் மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டு, பின்னர் உரிய நீதிமன்றத்தின் மூலம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4