மடகஸ்காரில் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!

#Death #world_news #Lanka4
Thamilini
2 years ago
மடகஸ்காரில்  மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!

மடகஸ்கார் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில், குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். 

குறித்த நெரிசலில் சிக்கி 107 பேர் காயமடைந்துள்ளதாகவும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹனித்ரா ரசாபிமானன்சோவா  தெரிவித்துள்ளார். 

இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 50,000 பார்வையாளர்கள் கூடியிருந்த பரியா மைதானத்தின் நுழைவாயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியே பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என செஞ்சிலுவைச் சங்கத்தின்  தகவல் தொடர்பு மேலாளரான ஆன்ட்சா மிராடோ தெரிவித்துள்ளார். 

இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 3 வரை மடகாஸ்கரில் நடைபெறும் பலதரப்பட்ட போட்டியாகும். தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல்வேறு தீவுகளில் சுமார் 40 ஆண்டுகளாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4