2 லட்சம் டாலர் பிணையில் டிரம்ப் விடுதலை

#Court Order #America #release #Trump
Prasu
2 years ago
2 லட்சம் டாலர் பிணையில் டிரம்ப் விடுதலை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் ஜோர்ஜியா சிறையில் ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சரணடைவதற்கான காலக்கெடுவிற்கு ஒரு நாள் முன்னதாக வியாழன் பிற்பகல் ஜோர்ஜியாவின் ஃபுல்டன் கவுண்டி சிறையில் ஆஜரானார்.

இந்நிலையிலிலேயே இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

வழக்கு விசாரணைக்காக சிறையில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்த ட்ரம்ப், 200,000 அமெரிக்க டொலர்களை பிணை செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இதேவேளை, தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக ட்ரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளதுடன் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4