விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்திய நாசா

#NASA #Player #Space
Prasu
2 years ago
விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்திய நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் விண்கலம் இன்று செலுத்தப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. 

நாளை காலை 3.27 மணிக்கு விண்கலம் செலுத்தப்படும் என நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்துள்ளன.

நாசாவிற்கான மைக்ரோ கிராவிட்டி ஆய்வகத்திற்கு சுழற்சி முறை பணிக்காக அனுப்பப்படும் ஸ்பேஸ்எக்ஸின் 7வது குழுவினர், ஆகஸ்ட் 26 அதிகாலை 3:27 மணிக்கு அனுப்பப்பட உள்ளதாக நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. பால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் ஆகியவை ஆரோக்கியமாக உள்ளன என்றும் நாசா கூறியிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் மொக்பெலியின் தலைமையில் டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் மொஜென்சன், ஜப்பானின் சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் ஆகிய விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்கு செல்கின்றனர். 

இவர்கள் ஆறு மாத காலம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4