கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை பிரதமர் மோடி சந்திப்பு

#India #PrimeMinister #America #world_news #2023
Mani
2 years ago
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை பிரதமர் மோடி சந்திப்பு

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் தென்னாப்பிரிக்கா கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது கிரீஸ் நாட்டுற்கு சென்றடைந்தார். கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகருக்கு விமானம் மூலம் வந்திறங்கிய பிரதமர் மோடியை வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் வரவேற்றார்.

இதையடுத்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ உடனான சந்திப்பை தொடர்ந்து அந்நாட்டு பிரதமரை பிரதமர் மோடி சந்தித்தார்.

அதன்பிறகு, கிரீஸில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்து இருந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து, இந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4