மிசோரம் ரயில் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

#India #Death #people #2023 #Tamilnews #Died
Mani
2 years ago
மிசோரம் ரயில் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சாய்ராங் பகுதியில் கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் நேற்று முன்தினம் காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கட்டிட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், மிசோரம் ரயில் பால விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.விபத்தின் போது 26 தொழிலாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 3 பேர் மட்டுமே பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 18 உடல்கள் இன்று வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5 உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4