அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் ஆய்வில் அதிர்ச்சி

#Australia #Women #Sexual Abuse
Prasu
2 years ago
அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் ஆய்வில் அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

2021 - 2022 இடைப்பட்ட 12 மாத காலப்பகுதிக்குள் 1.3 மில்லியன் அவுஸ்திரேலிய பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக தனி நபர் பாதுகாப்பு கணக்கெடுப்பு (Personal safety survey) சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஆண்களைவிட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மும்மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக 97 சதவீதமான பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் 75 வீதத்துக்கு மேற்பட்டோர் நேரடி பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

 அநாகரீகமான வெளிப்பாடு, தேவையற்ற தொடுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மேலும், 57 வீதமான பெண்கள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையவழி ஊடாக துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4