நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழப்பு

#India #Death #Accident #people #2023 #Nepal #Breakingnews #Died #ImportantNews #Indian
Mani
2 years ago
நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நடந்த சோகமான சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சம்பவத்தில் காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்கு இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாராவில் உள்ள சூரியாமை அருகே விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பேருந்தில் இரண்டு டிரைவர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பேர் இருந்தனர்.

இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!