பிரிக்ஸ் அமைப்பில் மேலும் ஆறு புதிய நாடுகள் இணைகின்றன

#India #PrimeMinister #world_news #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
பிரிக்ஸ் அமைப்பில் மேலும் ஆறு புதிய நாடுகள் இணைகின்றன

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்' மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. இது 3 நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி நிகழ்வாக மாநாடு நடக்கிறது.

தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசாஅழைப்பின் பேரில், மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அவரை அந்நாட்டு துணை அதிபர் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைய உள்ளதாக தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார். அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா, எகிப்து, எதோப்பியா, ஈரான், சவுதி மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஜனவரி 2024 இல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே சந்திரயான் 3 வெற்றிக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலக நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4