உக்ரைன் போர் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ஜனாதிபதி புடின்

#Meeting #War #Putin #Russia Ukraine
Prasu
2 years ago
உக்ரைன் போர் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ஜனாதிபதி புடின்

மேற்குலக நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்புகின்றது என அந்நாட்டு ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 'பிரிக்ஸ்' அமைப்பின் 15-வது உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது. இம்மாநாட்டில், பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். 

ரஷ்ய ஜனாதிபதி புடின், இந்த உச்சி மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

இதன்போது மேற்குலக நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வரவே ரஷ்யா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

மேலும் மேற்கு நாடுகளின் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 உக்ரைனில் நடந்த போருக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என்றும் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4