சந்திரயான் 3 வெற்றி - வாழ்த்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புதின்

#India #Russia #Putin #President #Space
Prasu
2 years ago
சந்திரயான் 3 வெற்றி - வாழ்த்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புதின்

அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன. 

ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை. தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

 இதுதொடர்பாக, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அனுப்பியுள்ள செய்தியில், இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தென் துருவத்திற்கு அருகில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விண்வெளியை ஆராய்வதில் இது ஒரு நீண்ட முன்னேற்றம். அறிவியல் மற்றும் பொறியியலில் இந்தியா அடைந்துள்ள வியத்தகு முன்னேற்றத்திற்கான சான்றாகும் இது என வாழ்த்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4