புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ளவர்கள் ரணிலிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்

#SriLanka #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ளவர்கள் ரணிலிடம்  நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

 இத்தாலி குடியரசு மற்றும் ஜேர்மனி பெடரல் குடியரசு ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய தூதுவர்களும், பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்துக்கான புதிய உயர்ஸ்தானிகருமே இவ்வாறு நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். 01. பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்துக்கான உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick)

 02. ஜேர்மனி பெடரல் குடியரசின் தூதுவர் – கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) 03. இத்தாலி குடியரசின் இலங்கைக்கான தூதுவர் – டாமியானோ பிரான்கோவிக் (Damiano Francovigh) நற்சான்று பத்திரங்களைக் கையளித்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!