லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய இளைஞர்

#India #Death #Student #London
Prasu
2 years ago
லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய இளைஞர்

பிரித்தானியாவில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் அங்குள்ள லண்டன் பிரிட்ஜ் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் குஷ் படேல்.

இவர் மாணவர் விசாவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியா வந்தார்.

இந்த நிலையில் லண்டன் பிரிட்ஜ் அருகில் குஷ் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இருக்கும் நிலையில், அதிகாரிகள் குஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகின்றனர்.

பணப்பிரச்சனையால் குஷ் தவித்து வந்ததாகவும், கல்லூரி கட்டணத்தை செலுத்த மிகவும் கஷ்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 கடந்த 10ஆம் திகதி கடைசியாக குடும்பத்தாருடன் குஷ் பேசியிருக்கிறார். அவர் மரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!