சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்குகிறது

#India #Moon
Mayoorikka
2 years ago
சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்குகிறது

சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்கவுள்ளது

 எனினும் குறித்த விண்கலம் நிலவில் தரையிங்குவதில் முன்னதாக அறிவிக்கப்ட்ட நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது

 சந்திரயான் 3 என்ற விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களுரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்சமயம் வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூமி சுற்றுவட்டப்பாதையை சுற்றி முடித்த பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்துள்ளது.

 சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் என அழைக்கப்படும் பகுதி தற்போது பிரிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதனையடுத்து, நிலவுக்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையிலான தூரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 நேற்றிரவு இறுதி வேகக்குறைப்பு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தநிலையில் நிலவில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறக்கப்படும் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 முன்னதாக இன்று மாலை 5.45க்கு தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. எனினும் குறித்த நேரத்தில் சற்று மாற்றம செய்யப்பட்டு இன்று மாலை 6.04க்கு நிலவில சந்திராயன் 3 விண்கலம் தரையிறக்கப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4