6.2 பில்லியன் பெறுமதியான இராணுவ வாகனங்களை இலங்கைக்கு வழங்கியது சீனா!
#SriLanka
#China
#Lanka4
Thamilini
2 years ago
சீன தேசிய பாதுகாப்பு அமைச்சு 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 11 அதிவேகமாக அபிவிருத்தி செய்யப்பட்ட இராணுவ வாகனங்களை இலங்கைக்கு கையளித்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விசேட கடமைகளுக்காக இந்த வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த வாகனங்களை பிரமித்த பண்டார தென்னகோன் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் பதிக்கப்பட்ட இந்த வாகனங்கள் முதலில் ராணுவ நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை.