புகுஷிமா அணு உலை கழிவுநீரை கடலில் திறந்து விட ஜப்பான் திட்டம்

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது.
இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது.
இந்த விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. கழிவு நீரை ஆலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை மூலம் வெளியேற்றுவதற்கான நடைமுறைகளை ஜப்பான் அரசு தொடங்கியது.
ந்நிலையில், அணு கழிவுகள் நீக்கப்பட்ட கழிவு நீரை வரும் 24ம் தேதி முதல் படிப்படியாக வெளியேற்ற உள்ளதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கழிவு நீரை முழுமையாக திறந்து விடுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.



