கின்னஸ் சாதனை படைத்த பூனை

#America #WorldRecord
Prasu
2 years ago
கின்னஸ் சாதனை படைத்த பூனை

மனிதர்கள் மட்டுமல்ல விலங்கினங்களும் கூட கின்னஸ் சாதனை படைத்து வருகின்றன. 

அமெரிக்காவில் உள்ள மிசூரி பகுதியை சேர்ந்த கிட்கேட் என்ற 13 வயது பூனை அதன் உரிமையாளர் திரிஷா சீப்ரிட் உதவியுடன் ஒரு நிமிடத்தில் அதிக முறை ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பூனை அதன் உரிமையாளருடன் சேர்ந்து ஜம்ப் ரோப்பிங் திறமையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

அதில், ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது. 

இந்த சாதனை குறித்து பூனையின் உரிமையாளரான திரிஷா சீப்ரிட் கூறுகையில், ஜம்ப் ரோப்பிங் செய்வது எனக்கும், எனது பூனைக்கும் பிடித்து வருகிறது. மேலும் பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!