ராணுவ உளவு செயற்கைக்கோளை மீண்டும் ஏவ திட்டமிடும் வடகொரியா

#NorthKorea #Missile #Test #President
Prasu
2 years ago
ராணுவ உளவு செயற்கைக்கோளை மீண்டும் ஏவ திட்டமிடும் வடகொரியா

அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. 

இதற்கிடையே கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் ஏவியது. ஆனால் ராக்கெட் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வட கொரியா தெரிவித்தது. 

இந்நிலையில் உளவு செயற்கை கோளை மீண்டும் விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக ஜப்பான் அதிகாரிகள் கூறும்போது, வடகொரியா வரும் நாட்களில் உளவு செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளது என்றனர்.

வருகிற 24-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்து வடகொரியா அதிகாரிகள் தெரிவித்ததாக ஜப்பான் கடலோர காவல் படை கூறியுள்ளது.

அதே வேளையில் வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவ உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்று கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர் ஹிரோ முனே கிகுச்சி தெரிவித்தார். 

ஆனால் அந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் ஏவப்பட்ட உளவு செயற்கைக் கோளை போலவே இருக்கலாம் என்று நம்புகிறேன் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!