'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்

#India #PrimeMinister #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் 15வது பிரிக்ஸ் மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக காணொளி மூலம் நடத்தப்பட்ட இந்த மாநாடு, இந்த ஆண்டு நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பிரேசில் அதிபர் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்காளதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானத்தில் மூலம் தென்னாப்பிரிக்கா சென்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4