இந்தி நடிகர் சன்னி தியோலின் பங்களா ஏல நடவடிக்கை திடீரென வாபஸ்

#India #Actor #2023 #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
இந்தி நடிகர் சன்னி தியோலின் பங்களா ஏல நடவடிக்கை திடீரென வாபஸ்

அண்மையில் ரீலிஸ் ஆகி 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படும் கதார் - 2 இந்தி திரைப்படத்தின் கதாநாயகனும் பா.ஜ.க எம்.பி.யுமான நடிகர் சன்னி தியோல் வங்கியில் கடன் பெற்ற விவகாரம் குறித்து காங்கிரஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மும்பை ஜூகுவில் உள்ள சன்னி தியோலின் பங்களாவை கட்டுவதற்கு பெறப்பட்ட கடனுக்கான 56 கோடி ரூபாயை செலுத்தத் தவறியதால், வரும் 25 ஆம் தேதியன்று பங்களா ஏலம் விடப்படும் என்று பரோடா வங்கி நிர்வாகம் அறிவித்தது.

அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில், தொழில் நுட்பக் காரணம் எனக்கூறி ஏல நடவடிக்கையை வங்கி நிர்வாகம் திரும்பப் பெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. யாரின் தூண்டுதலின் பேரில் ஏல நடவடிக்கையை வங்கி நிர்வாகம் திரும்பப் பெற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!