திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு

#India #Temple #Breakingnews
Mani
2 years ago
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவா டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக நவம்பர் மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் 21ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி தங்களின் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வரும் 22-ந் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்கர சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தொடர்புடைய பிரேக் தரிசன டிக்கெட்டுகள், வரும் 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனத்திற்கான டோக்கன்கள் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். 24ம் தேதி சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகள் ரூ. 300 வழங்கப்படும். பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4