ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த தீர்மானம்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்ற உத்தரவு தொடர்பில் ஆசிரியர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேவேளை சில பாடசாலைகளில் நிலவும் வெற்றிடத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் அதே பாடசாலைகளில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.