அரியூரில் ரெயில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக பலி!

#India #Train #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
அரியூரில் ரெயில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக பலி!

வேலூர், தொரப்பாடி யை சேர்ந்தவர் சரவணன். கார் டிரைவர். இவரது மகன் சுகந்தன் (வயது 21). இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சுகந்தன் நேற்று இரவு 8 மணி அளவில் தனது நண்பர்களுடன் அரியூர் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வேகமாக வந்தது. இதனை கவனிக்காமல் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த சுகந்தன் ரெயில் அருகே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சுகந்தன் உள்ளிட்ட நண்பர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். அதற்குள் வேகமாக வந்த ரெயில் சுகந்தன் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

படுகாயம் அடைந்த சுகந்தனை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கும்பா றை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுகந்தன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4