பூஜித ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது
#SriLanka
#Accident
Prathees
2 years ago
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பயணித்த பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அவர் ஓட்டிச் சென்ற கார் தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாராளுமன்ற வீதியில் உள்ள ஜப்பான் நட்புறவுப் பாலத்திற்கு அருகில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முன்னாள் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கோ அல்லது வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.