கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு விஷேட ரயில் சேவை

#SriLanka #kandy #Train #service #Special Day
Prasu
2 years ago
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு விஷேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி கொழும்பிலிருந்து கண்டிக்கு 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்தார்.

அதற்கமைவாக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையிலும் மீண்டும் கண்டியில் இருந்து கோட்டை வரையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 எசல பெரஹராவில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பும் மக்களுக்காக கண்டியிலிருந்து மாத்தளை வரையிலும், கண்டியிலிருந்து நாவலப்பிட்டிய வரையிலும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எம். ஜே. இதிபொலகே குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!