நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5000 வைத்தியர்கள்!

#SriLanka #Hospital #doctor #Lanka4
Thamilini
2 years ago
நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5000 வைத்தியர்கள்!

வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு தகுதி பெற்ற 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இந்த நிலைமையை தவிர்க்க அரசாங்கம் அவசர வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் எனவும் அச்சங்கத்தின்பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார். 

வேலை கிடைத்தவுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப் பணிக்குத் தேவையான கல்வியை முடித்த 5,000 மருத்துவர்கள் நாட்டிலேயே தங்கியிருப்பது பாரதூரமான விடயம் எனவும், இந்த பிரச்சனையின் தீவிரம் எதிர்காலத்தில் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பயிற்சியின் பின்னரான நியமனங்களைப் பெற்ற 250 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் விலகத் தீர்மானித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இதனை தடுக்க முறையான திட்டம் ஒன்று வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!