ஆப்கானிஸ்தானில் கடும் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ளும் 1.5 கோடி மக்கள்

#Afghanistan #Taliban #people #Food
Prasu
2 years ago
ஆப்கானிஸ்தானில் கடும் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ளும் 1.5 கோடி மக்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் 2 ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களின் தேவைகளை அதிகப்படுத்தியிருப்பதாக செஞ்சிலுவை சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் 27 லட்சம் மக்கள் நீண்ட கால உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. 

 நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பெரிய பொருளாதார திட்டங்களை அரசு தொடங்கியிருப்பதாக தலிபான் அரசின் பொருளாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4