ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டத்திற்கு அமைய எவ்வித சமூக சேவை நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் அந்தப் பதவிகளுக்கு வருவதற்கு முன்னரும் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் வகையில், சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வகையில், உரிய சுற்றறிக்கையை மாற்றுமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி நிறுவனங்களின் முன்னாள் தலைவர்கள், இந்தக் கலந்துரையாடலில், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கட்சியின் 30 முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.