கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

#India #Tamil People #people #Tamilnews #ImportantNews #Special Day
Mani
2 years ago
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஓணம் பண்டிகையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 29, 2023 செவ்வாய்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

29-8-2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, 2023 செப்டம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23-9-2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 (under negotiable instruments act 1881)-ன்படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 29-8-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4