ஜக்கியதேசிய கட்சியின் மாவட்ட கூட்டம் இன்று கிளிநொச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்றது

#SriLanka #Kilinochchi #Lanka4
Kanimoli
2 years ago
ஜக்கியதேசிய கட்சியின் மாவட்ட கூட்டம் இன்று கிளிநொச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்றது

ஜக்கியதேசிய கட்சியின் மாவட்ட இன்று கிளிநொச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார கலந்து கொண்டார். இக்கலந்துரையாடலில் முன்னால் கல்வி ராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

images/content-image/1692368974.jpg

 இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஏற்றதன் பின்னர் அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டி எழுப்பியுள்ளார். எரிபொருளுக்கான வரிசை, சமையல் எரிவாயுக்கான வரிசை, பால் மா தட்டுப்பாடு போன்ற அத்தியாவசிய பொருட்களை பெறவேண்டிய வரிசைகளில் இருந்து மக்களை காப்பாற்றியதுடன், தொடர்ந்தும் மக்களுக்கு சேவை ஆற்றுகிறார்.

images/content-image/1692369010.jpg

 அண்மையில் இந்தியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு உதவி திட்டங்கள் பெறுவது தொடர்பாகவும் கலந்துரையாடினார். அது மட்டுமன்றி ஜப்பான் நாடு மற்றும் சீனா என பல நாடுகளிலும் இருந்து அந்நாட்டு தலைவர்கள் இலங்கைக்கு பல்வேறு வகையிலும் உதவி வழங்குவதற்காக முன்வந்துள்ளதாகவும்,

images/content-image/1692369023.jpg

 இனிவரும் தேர்தலின் மக்கள் ரணில் விக்ரம சிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்களாயின் பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார். அத்துடன் 13ம் திருத்தச் சட்டத்தை திருத்தி போலீஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாலிட ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!