விடுதியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

#SriLanka #Death #Student #University
Prathees
2 years ago
விடுதியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

விடுதியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகம, தொழிநுட்ப பீடத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவன் ஒருவர் விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

 இன்று காலை குறித்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த மாணவன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 அங்கு மாணவன் உயிரிழந்தார். கட்டிடத்தில் இருந்து மாணவன் தவறி விழுந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 உயிரிழந்த மாணவன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற சந்தேகம் நிலவுவதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!