உத்தரகாண்டில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
#Accident
#Hospital
#Train
#Workers
Prasu
1 hour ago
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள விஷ்ணுகாட்-பிபல்கோட்டி நீர் மின்சார திட்ட சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற லோகோ ரயில், சரக்கு ரயிலுடன் மோதியதில் சுமார் 60 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நடந்தபோது ரயிலில் மொத்தம் 109 பேர் இருந்ததாகவும், அவர்களில் 60 பேர் காயமடைந்ததாகவும் சாமோலி மாவட்ட நீதிபதி கௌரவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அனைத்து மக்களும் மீட்கப்பட்டதாகவும் காயமடைந்த அனைவரின் நிலையும் சீராக இருப்பதாகவும் கௌரவ் குமார் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )