ஹோமாகம தீ விபத்தில் 4 தொழிற்சாலைகள் சேதமடைந்துள்ளன
கைத்தொழில் நகரமான ஹோமாகம கட்டுவன பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீயினால் 04 தொழிற்சாலைகள் சேதமடைந்துள்ளன.
தீ பரவிய தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தொழிற்சாலைக்கு சொந்தமான பெயின்ட் தொழிற்சாலை மற்றும் ஜவுளி தொழிற்சாலையும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 8:30 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க நேற்று இரவு 11:30 மணியளவில் ஆனது.
தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி, ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் பொலிசார் என 300 பேர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
6 தண்ணீர் பவுசர்கள், 3 கூடுதல் பவுசர்கள் மற்றும் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தீயில் சிக்கிய தொழிற்சாலையின் சில பகுதிகள் வளிமண்டலத்தில் விழுவதை ஹோமாகம சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணக்கூடியதாக இருந்ததால் எரிந்த பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
தீயினால் பாரிய அளவிலான ஆபத்துக்கள் ஏதும் இல்லையென்றாலும், ஹோமாகம பிரதேசவாசிகளை முகக்கவசம் அணியுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அறிவித்துள்ளதோடு, ஏற்படக்கூடிய சுவாசக் கோளாறுகளை குறைத்துக்கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த தீ விபத்தின் காரணமாக கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் விங் கமாண்டர் தீகஜயவீர தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.