ஜெர்மனியில் கடும் மழை - 90 விமானங்கள் ரத்து
#world_news
#Lanka4
#Germany
Dhushanthini K
2 years ago

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை, மற்றும் வெள்ளப்பெருக்கால் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ஐரோப்பிய மையமான பிராங்பேர்ட் விமான நிலையத்தில் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
இன்று (18.08) மட்டும் 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 23 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.



