மால்டோவா அதிகாரிகள் ரஷ்யாவில் நுழைய தடை!

மால்டோவன் அதிகாரிகள் குழு ரஷ்யாவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனமான RIA அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து மாஸ்கோவிற்கும் சிசினாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.
இந்த வார தொடக்கத்தில், உறவுகளில் ஏற்பட்ட முறிவு காரணமாக 22 ரஷ்ய தூதர்கள் மால்டோவன் தலைநகரில் இருந்து வெளியேறினர்.
மால்டோவாவின் வெளியுறவு அமைச்சகம், ருமேனியா மற்றும் உக்ரைன் எல்லையில் இருக்கும் சிறிய அரசை சீர்குலைக்க ரஷ்ய முயற்சிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், ரஷ்ய தூதுவர்களை குறைக்குமாறு கடந்த மாதம் கேட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் மால்டோவாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவும், அதிகாரிகள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.



