விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து மாணவர் ஒருவர் பலி!

#SriLanka #Lanka4 #Building
Thamilini
2 years ago
விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து மாணவர் ஒருவர் பலி!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் விடுதி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 

மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த மாணவர் இன்று (18.08) காலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 எவ்வாறாயினும், உயிரிழந்த மாணவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!