நீர் தேடி வரும் விலங்குகளை விஷம் வைத்து வேட்டையாடும் கொடூரம்!
வறட்சியான காலங்களில் நீரைத் தேடி வரும் வன விலங்குகளை வேட்டையாடும் மோசடி தற்போது இடம்பெற்று வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வறண்டு கிடக்கும் ஏரிகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் கிணறுகளை அமைத்து நீரில் விஷம் கலந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கதிர்காமம் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் மக்களுக்கு குறித்த இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்காகவே விலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும் குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் விஷம் கலந்து இறக்கும் விலங்குகளின் இறைச்சிகள் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
வறட்சியான காலப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை தேடும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 1992 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.