எதிர்காலத்தில் முட்டை விலையைக் குறைக்க முடியும்
#SriLanka
#Mahinda Amaraweera
#Egg
#Lanka4
Kanimoli
2 years ago
முட்டை உற்பத்தி குறைந்தமையால் முட்டை விலை உயர்ந்ததாகவும், படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் முட்டை விலையைக் குறைக்க முடியும் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நெல் கொள்வனவுக்கு சந்தைப்படுத்தல் சபைக்குப் போதியளவு பணம் ஒதுக்கப்படவில்லை.
திறைசேரியிடமிருந்து கிடைத்த நிதியைக் கொண்டு
ஓரளவுக்கு நெல் கொள்வனவை மேற்கொண்டுள்ளோம். இருந்தபோதும்
எதிர்பார்த்த விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் நெல்லை
விற்பனை செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லையென்றும் அமைச்சர்
குறிப்பிட்டார்.