இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்து சில மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செயல்படுகிறது. இது 15 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 19 ஆம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைரங்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவதால் ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் பேர் இதனை பார்வையிடுகின்றனர்.
இந்நிலையில் அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சில விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் அங்கு கண்காட்சிகள் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்காட்சியின் போது இந்த பொருட்கள் திருடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்து அருங்காட்சியகத்தின் தலைவர் ஜார்ஜ் உத்தரவிட்டார். மேலும், திருடப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



