கட்டுநாயக்க விமான நிலையத்தில் இ-கேட் கவுண்டர்கள் அமைப்பது குறித்து ஆய்வு!

#SriLanka #Airport #Lanka4
Thamilini
2 years ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இ-கேட் கவுண்டர்கள் அமைப்பது குறித்து ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய CCTV கமரா கட்டுப்பாட்டு நிலையத்தை நிறுவுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர்  திரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(17.08)  இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இந்த கமரா அமைப்பு புதிய தொழில்நுட்ப மென்பொருளைப் பயன்படுத்தி தரவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வருகை முனையம் மற்றும் புறப்படும் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு அதிகாரிகள் கவுன்ட்டர்களையும் அவர் ஆய்வு செய்துள்ளார்.

விமானப் பயணிகளுக்கு திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்கும், மற்ற சர்வதேச விமான நிலைய நிலைமைகளுக்கு ஏற்ப குடியேற்ற சேவைகளை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், புதிய இ-கேட் கவுண்டர்கள் அமைப்பது குறித்து  திரன் அலஸின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!