வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரத் திட்டம்
வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இலக்கு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையை பிரதான சுற்றுலா தலமாக கட்டியெழுப்புவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இது இடம்பெற்றுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிகரமான மற்றும் வசதியான இடமாக இலங்கையை மாற்றுவதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தற்போதைய திட்டங்கள் மற்றும் இதில் தனியார் துறையின் பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் அதிகாரிகளிடம் தகவல்கள் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு வரையில் சுற்றுலாத்துறைக்கான மூலோபாய திட்டத்தை தயார் செய்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக கட்டியெழுப்புவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை அறிக்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. இதுவரை 95 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.