வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசேட கண்காணிப்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
வங்கி முறையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.