சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது கல்விக்காக குறைந்த நிதியை ஒதுக்கும் இலங்கை!
#SriLanka
#Lanka4
#education
Thamilini
2 years ago
தெற்காசிய பிராந்தியத்தில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த ஒதுக்கீட்டைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது என யுனிசெப் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான யுனிசெப் தலைவர் கிறிஸ்டியன் ஸ்கூக், "அதிக முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்காக தேசிய கல்வி வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% க்கும் குறைவாகவே கல்விக்காக இலங்கை ஒதுக்குகிறது. சர்வதேச அளவுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சரை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.