நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த ரஷ்ய விண்கலம்
#Russia
#Space
Prasu
2 years ago

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷியா கடந்த 11-ந்தேதி விண்ணில் ஏவியது.
இந்த நிலையில் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளது.
அந்த விண்கலம் சுமார் 5 நாட்கள் நிலவை சுற்றி வரும். வருகிற 21-ந்தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியாவின் இஸ்ரோ ஏவிய சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வருகிற 23-ந்தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



