4பேரப்பிள்ளைகள், 6பிள்ளைகள் 56 வயதான பெண்மணி ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை

#SriLanka #Lanka4 #competition #Ocean
Kanimoli
2 years ago
4பேரப்பிள்ளைகள், 6பிள்ளைகள் 56 வயதான பெண்மணி ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை

நான்கு பேரப்பிள்ளைகள், ஆறு பிள்ளைகள் 56 வயதான பெண்மணி ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து மூன்றாமிடத்தை தனதாக்கிக் கொண்டார்! நான்கு பிள்ளைகள், 40 வயது பெண்மணி முதலாமிடத்தையும், மூன்று பிள்ளைகள் இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44வயது பெண்மணி இரண்டாமிடத்தையும் கடலில் நீந்தி பெரும் பரப்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

 வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது. இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது. இதன் போதே குறித்த வயோதிப மாதுக்கள் நீத்தி பெரும் பருபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

 இதில் ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன, ஆயினும் பெண்களுக்கான நீச்சல்ப் போட்டியில் வயோதிப மாதுக்களின் நீச்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பருத்தித்துறை- தென்னியம்மன்்முனையில் இருந்து இன்பசிட்டி வரை நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!